search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலின் தரம் கண்டறிய கொள்முதல் மையங்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்த கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    பாலின் தரம் கண்டறிய கொள்முதல் மையங்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்த கோரிக்கை

    • காங்கயம் சட்டமன்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
    • பாலின் அளவு வேறுபாடு வர ஆரம்பித்து விட்டது.

    வெள்ளகோவில் :

    தமிழகத்தில் பால் கொள்முதல் மையங்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.காங்கயம் சட்டமன்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை புதூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 4 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பால் கொள்முதல் மையத்தில் அளவுகோல் மற்றும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் எந்திரங்கள் பழுதடைந்த நிலையில் ஆவின் நிறுவனம் அவைகளை அகற்றி விட்டது. இதனால் இந்த சங்கத்தில் இருந்து லாரிகளில் அனுப்பும் பாலின் அளவு வேறுபாடு வர ஆரம்பித்து விட்டது.இதற்கு முன்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் பாலின் அளவு கொழுப்பு சத்து மற்றும் இதர சத்து ஆகியவை இங்கே தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    பால் குறைபாட்டை ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதன் மூலம் எளிதில் சரி செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அனைத்திலும் ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படும் நிலையில் பாலின் அளவு மற்றும் குளிர் நிலை பற்றி செல்போன் மற்றும் கணினி மூலம் ஒரே நேரத்தில் அறிய வாய்ப்பு உள்ளது.

    மேலும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பால் விவரங்களை உடனடியாக ஆன்லைனில் தெரிந்து கொள்வதால் ஆவின் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலினை சரியாக வினியோகித்து மக்களுக்கு தேவையான பாலையும் கிடைக்க வழி செய்ய வாய்ப்பு உள்ளது.

    எனவே தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், குளிரூட்டும் நிலையங்கள், கிளை பால் கொள்முதல் மையங்கள் ஆகியவற்றில் உடனடியாக ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×