search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி அணை நீர்மட்டம் சரிவால் பாசனம், குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
    X

    அமராவதி அணை.

    அமராவதி அணை நீர்மட்டம் சரிவால் பாசனம், குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

    • அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

    நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    Next Story
    ×