search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகத்தை மேலும்  அதிகரிக்க முடிவு
    X

    கோப்பு படம்

    சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகத்தை மேலும் அதிகரிக்க முடிவு

    • தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையான இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன.
    • நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் 14வது வந்தே பாரத்ரெயில் சேவை சென்னை-கோவை இடையே கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ெரெயில் சேவையான இந்த ரெயிலில்,7 ஏ.சி. பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 500க்கும் அதிகமானவர்கள் பயணம் செய்ய முடியும்.

    புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ெரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நாட்களிலும் இது நிரம்புமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 8-ந்தேதியில் இருந்து இப்போது வரையிலும் ஒரு நாள் விடாமல் இந்த வண்டியில் இடம் கிடைக்காத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த மாதம் 15-ந் தேதி வரையிலுமே ஒரு இடம் கூட இல்லாத அளவுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

    வந்தே பாரத் ரெயில் ரெயில்யில் சேவை துவக்கப்பட்ட நாளில் இருந்து 100 நாட்கள் வரையிலும் புல் ஆகி இருப்பது கோவைக்கும், சென்னைக்கும் இடையிலான ெரயில் தேவையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கு இந்த ரெயிலில் உள்ள வசதிகளும், சேவையும் முக்கியக் காரணமாக இருப்பதுடன் நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த ரெயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது போலவே கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ெரயிலை இயக்கினால் அமோக வரவேற்பு கிடைக்குமென்ற வாதமும் வலுத்துள்ளது. கோவையில் கேரள மக்கள் அதிகமிருப்பதால் திருவனந்தபுரம், மங்களூருக்கும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    வேகத்தைப் பொறுத்தவரையில் முதல் 14 வந்தே பாரத்ரெயில்களில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.டில்லி-வாரணாசி வந்தே பாரத் 96.37 கி.மீ., வேகத்திலும், நிஜாமுதீன்- ராணி கம்லாபதி வந்தே பாரத் 95.89 கி.மீ., வேகத்திலும் இயக்கப்படும் நிலையில், இந்த ரெயிலின் சராசரி வேகம் தற்போது 90.36 கி.மீ., என்ற அளவில் உள்ளது.

    ஜோலார்பேட்டையிலிருந்து கோவை வரையிலான 280 கி.மீ., தூரத்துக்கு வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.ஈரோட்டில் காவிரி ஆற்றின் மேலே பாலத்தை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது.இந்தப் பணிகள் முடிந்தபின்பு, சென்னை-கோவை வந்தே பாரத் ரெரயிலின் வேகம், 110 கி.மீ.,லிருந்து 130 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக இப்போது 5:50 மணி நேரமாகவுள்ள பயண நேரம் மேலும் 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×