search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் மழையால் பயிர்கள் சேதம் - கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    உடுமலை பகுதியில் மழையால் பயிர்கள் சேதம் - கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    • பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
    • பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது.தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் துவங்கும் போது அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஜுன், ஜூலை மாதத்தில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறக்கப்படும்‌.

    முன்னதாக இந்த அணை மூலம் திறக்கப்படும் நீர் மூலம் உடுமலை ,மடத்துகுளம் ,தாராபுரம் தாலுகா பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது‌. மேலும் மக்காச்சோளம், கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட கல்லாபுரம்-ராமகுளம் கால்வாய் மூலம் சுமார் 3200 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பாசன வசதி செய்து வருகின்றனர்.இப்பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக நெற்கதிர்கள் உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும் சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும் மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்போடு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.

    ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கூறி முறையிடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:- நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்து இருந்தோம். இந்த நிலையில் தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி இருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து, பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×