search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீசன் நிறைவடையும் நிலையிலும் தொடரும் பருத்தி வரத்து
    X

    பருத்தி.

    சீசன் நிறைவடையும் நிலையிலும் தொடரும் பருத்தி வரத்து

    • 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உடுமலை:

    நம் நாட்டின் பருத்திச்சந்தையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இந்திய பருத்திக்கழகம் கண்காணித்து வழிநடத்துகிறது.நடப்பு பருத்தி சீசனான 2022 அக்டோபர் - 2023 செப்டம்பர் வரை 315 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பேல் என்பது 170 கிலோ. நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் தேவையாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வால் நடப்பு சீசன் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கியது. கடந்த 2022 அக்டோபரில் 9.71 லட்சம் பேல், நவம்பரில் 27.03 லட்சம், டிசம்பரில் 27.96 லட்சம், 2023 ஜனவரியில் 26.66 லட்சம், பிப்ரவரியில் 33.77 லட்சம், மார்சில் 30.07 லட்சம், ஏப்ரலில் 29.54 லட்சம், மே மாதத்தில் 25.96 லட்சம், ஜூனில் 13.63 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது.இதுவரை 224.37 லட்சம் பேல் அளவுக்கு பருத்தி விற்பனைக்கு வந்துள்ளது.

    தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனான டாஸ்மா தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், நடப்பு பருத்தி சீசனில் பருத்தி வரத்து தாமதமாக துவங்கியது. தற்போது இரண்டாம் அறுவடை நடந்து வருவதால் சீசன் நிறைவடையும் நிலையிலும் வரத்து தொடர்கிறது.தற்போதைய நிலவரப்படி தினமும் 35 ஆயிரம் பேல் வருகிறது. பஞ்சு ஒரு கேண்டி எனும் 356 கிலோ 55 ஆயிரம் முதல் 56 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×