search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி கோவிலில் உழவாரப்பணி
    X

    கோப்புபடம்.

    அவினாசி கோவிலில் உழவாரப்பணி

    • கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கோவில் சுற்றுப்பிரகாரம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா்.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவனடியாா்கள் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலி ங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி, சிவனடியாா்கள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா். கோவில் சுற்றுப்பிரகாரம், தளம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா். இதையடுத்து பட்டி அரசமர விநாயகா், அவிநாசி லிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், முருகன், விநாயகா் , சண்டிகேஸ்வரா், காலபைரவா் கோவில்கள், அா்த்தமண்டபம், கனகசபை, மகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினா்.

    இதைத்தொடா்ந்து மூலவா், உற்சவமூா்த்தி, பஞ்சலிங்கம், நந்திதேவா், கொடிக்கம்பம், பலிபீடம் ஆகியவற்றையும் கழுவி தூய்மைப்படுத்தினா். சுவாமிக்கு அணிவி க்கக்கூடிய அனைத்து வஸ்திரங்களையும் சலவை செய்து உலரவைத்து தூய்மை செய்தனா். உழவா ரப்பணியில் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்ப ட்டோா் பங்கேற்றனா். பிறகு தெப்பக்குளத்தையும் சுத்தம் செய்தனா். மதியம் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணத்துடன் அனைவரும் கூட்டு பிராா்த்தனை செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×