search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக செல்லும் திருவனந்தபுரம் மெயில் ரெயில் இயக்கத்தில் மாற்றம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக செல்லும் திருவனந்தபுரம் மெயில் ரெயில் இயக்கத்தில் மாற்றம்

    • 26ம் தேதி திருச்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.
    • சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர்-திருவனந்த புரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள மேம்பாட்டு பணி நடப்பதால் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை - திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் எண்: 12623 வரும் 26ம் தேதி திருச்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.இதனால் அங்கமாலி, ஆலுவா, எர்ணாகுளம் டவுன், திரிபுனிதிரா, கோட்டயம், செங்கனச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம், வர்கலா, திருவனந்தபுரம் ஸ்டேஷன்களுக்கு, 26ம் தேதி அந்த ரயில் செல்லாது.

    மறுமார்க்கமாக, 26ம் தேதி திருவனந்தபுரத்துக்கு பதில், திருச்சூரில் இருந்து சென்னைக்கு மெயில் எக்ஸ்பிரஸ் எண்: 12624 இயக்கப்படும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×