search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் பா.ஜ.க. தேர்தல் பணி பயிலரங்கம்
    X

    நிகழ்ச்சியில் மாநில பா.ஜ.க. இணை ெபாறுப்பாளர் சுதாகர்ரெட்டி பேசியபோது எடுத்த படம்.

    உடுமலையில் பா.ஜ.க. தேர்தல் பணி பயிலரங்கம்

    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
    • நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி பொறுப்பாளர்கள் பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கட்சியின் தமிழ் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொது செயலாளர் சீனிவாசன் பாலகணபதி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், மண்டல தலைவர்கள் கண்ணாயிரம், நாகமாணிக்கம், மாரியப்பன், பாலசுப்பிரமணியம், மடத்துக்குளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்ன செய்தியாளரிடம் சுதாகர் ரெட்டி கூறியதாவது:- மக்கள் பாரதிய ஜனதா கட்சியை நம்புகிறார்கள். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் மக்களுக்காக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×