என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - இன்று மாலை நடக்கிறது
கடந்த ஜனவரி 8-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் வேலன் ஓட்டல் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது.விழாவில் திறனாய்வுப் போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் விழா நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 8-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.
Next Story






