search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கூர் இடைச்சியம்மன் குளத்தில் அனுமதியின்றி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
    X

    மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம். 

    கொங்கூர் இடைச்சியம்மன் குளத்தில் அனுமதியின்றி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

    • குளம் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பலர் எவ்வித அனுமதியும் பெறாமல் பாசனத்தலைவர் தனிநபரிடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று கொண்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
    • ரூ.3லட்சம் பணம் கொடுங்கள் என மிரட்டுகிறார்கள்.

    திருப்பூர்:

    தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தில்லைமுத்து திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மீன்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கொங்கூர் இடைச்சியம்மன் குளத்தில் ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்பட்ட குத்தகையினை பொதுப்பணித்துறைக்கு செலுத்தி மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தார்கள்.

    இந்தநிலையில் புதிய அரசாணை வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சங்க உறுப்பினர்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால் குளம் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பலர் எவ்வித அனுமதியும் பெறாமல் பாசனத்தலைவர் தனிநபரிடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று கொண்டு மீன்பிடித்து வருகிறார்கள். மீனவ கூட்டுறவு சங்கத்தினர் தட்டிக்கேட்டால் குளம் எங்கள் ஊரில் உள்ளது.

    ஆகவே நாங்கள்தான் மீன்பிடிப்போம் .உங்களால் என்ன செய்யும் முடியுமோ செய்யுங்கள் என மிரட்டுவதுடன் ரூ.3லட்சம் பணம் கொடுங்கள் எனவும் மிரட்டுகிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ள இந்த காலத்தில் முந்தைய ஆண்டுகளில் மீன்பிடிக்காமல் ஏராளமான மீன்கள் வளர்ந்து குளத்தில் இருக்கின்றன. அவை யாவும் தற்சமயம் அனுமதியின்றி பிடித்து வருவதால் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே இதனை விரைவில் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×