search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர கடைகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    சாலையோர கடைகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

    • திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது.
    • பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், அந்த கூட்டத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இணைப்பு சங்கமாக மாற்றுவது.

    மே 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும், வியாபாரிகளும் கடைகளை அடைத்து, அந்த மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.பெருகி வரும் சாலையோர வியாபாரிகளால் அனைத்து கடை வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் சாலையோர கடைகள் அமைப்பதை தவிர்த்து அதற்கென ஒரு இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.

    புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகள் தொடர்பாக போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது. திருப்பூர் மாநகரில் சாலைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்படுவதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கிறது. எனவே சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×