search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
    X

    திருப்பூர் கேத்ரீன் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள். 

    திருப்பூர் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    • மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
    • ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையுண்டு இறந்த நிகழ்வை புனித வெள்ளியன்று நினைவு கூர்ந்த நிலையில் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பெருநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

    இதையொட்டி திருப்பூர் புனித ஜோசப், கேத்ரீன், அவிநாசி புனித தாமஸ், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலியில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி, தீமையின் சக்தி தலைதூக்க கூடாது என்ற வேண்டுதலை பக்தர்கள் முன்வைத்தனர்.

    இது குறித்து பங்குதந்தைகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் , காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆலயங்கள் அனைத்தும் களை கட்டின.

    Next Story
    ×