search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
    X

     உயிருடன் மீட்கப்பட்டவரை படத்தில் காணலாம்.

    குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×