என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊதியூர் அருகே கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்9 Nov 2023 7:06 AM GMT
- சுப்பிரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முத்தூர்:
ஊதியூர் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம், குள்ளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி (வயது 26). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த சுப்பிரமணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Next Story
×