என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் -  திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

    அமராவதி ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் - திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

    • திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • குள்ளகாளிபாளையம் இடையே 250 மீட்டர் தூரம் கான்கிரீட் பாலம் அமைத்தால் 12 ஆயிரம் பேர் பயனடைவார்கள்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திட்டக்குழு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். துணை தலைவரான கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்டவை திட்டக்குழு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, மாநில திட்டக்குழு ஒப்புதல் பெற்று நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும்' என்றார். மாவட்ட திட்டமிடும் அலுவலர் முரளிகண்ணன் வரவேற்றார். திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில், அமராவதி ஆற்றின் தென்புறம் உள்ள கரைப்பகுதி மதுக்கம்பாளையம் மற்றும் அமராவதி ஆற்றின் வடபுறம் உள்ள கரைப்பகுதி குள்ளகாளிபாளையம் இடையே 250 மீட்டர் தூரம் கான்கிரீட் பாலம் அமைத்தால் 12 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வது குறைக்கப்படும். தாராபுரம், வெள்ளகோவில் பகுதிக்கு செல்வதற்கான காலஅவகாசம் குறையும். பாலம் அமைக்கும் தீர்மானத்தை மாவட்ட திட்டக்குழு தலைவர் கொண்டு வந்தார்.

    Next Story
    ×