என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

    • சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.
    • ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் துரைப்பாண்டி. இவரது மகன் திருப்பதி, தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். இந்த நிலையில சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி விட்டதாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை காவல் சோதனைச் சாவடியில், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என்பதும் மேலும் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் போலீசாரது விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சபரிநாதன் (வயது 21), திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராபர்ட் பீட்டர் என்பவர் மகன் இம்மானுவேல் செல்வராஜ் (வயது 20) , அவிநாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் நவீன்குமார் (வயது25) என்பதும் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் சபரிநாதன் என்பவர் மீது, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×