search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 3 மாவட்டங்களில் 24,500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் - திட்ட இயக்குனர் தகவல்
    X

    கோப்புபடம்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 3 மாவட்டங்களில் 24,500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் - திட்ட இயக்குனர் தகவல்

    • 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    அவினாசி :

    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ங்களில் 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் என திட்ட இயக்குனர் சிவலிங்கம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.5 இடங்களில் ெரயில்வே பாதையின் குறுக்கேயும், 10 இடங்களில் தேசிய நெடு ஞ்சாலையின் குறுக்கேயும் சுரங்கம் அமைத்து அதில் குழாய்கள் பதிக்கப்ப ட்டுள்ளன.இதில் 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள், 265 கி.மீ.,க்கு கடினமான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட 1,295 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட உள்ளது. இதில் 37 பொதுப்பணித்துறை குளங்கள், 47 ஊராட்சி குளங்கள், 971 கிராம குட்டைகள் அடங்கும். 6 இடங்களில் தானியங்கி நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓராண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தால் தண்ணீர் பம்பிங் செய்ய ப்படும். நாள் ஒன்றுக்கு 250 கன அடி வீதம் மொத்தமாக 1.5 டி.எம்.சி., தண்ணீர் பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்ப டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீருற்று வாயிலாக 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்.திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. பிப்ரவரி 20-ந்தேதி வெள்ளோட்ட பணிகள் துவங்கின. ஒவ்வொரு பகுதி யாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×