என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் மகளிர் தலைவிக்கு உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் ஒத்திகை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஒத்திகை முகாம்
- ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம்
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை:
தமிழகம் முழுவதும் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை மூலம் பணியாளர்கள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






