என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏலகிரிமலையில் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு
  X

  ஏலகிரி மலை சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

  ஏலகிரிமலையில் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணி நடந்தது
  • நீண்ட தூரத்திற்கு காத்திருந்த வாகனங்கள்

  ஜோலார்பேட்டை:

  ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலைக்கு செல்ல பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றன இந்நிலையில் நேற்று முன்தினம் ஏலகிரி மலை 9-வது கொண்டை ஊசி வளைவில் 7 மீட்டர் நீளமுள்ள பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம் உத்தரவின் பேரில் உடனடியாக பழுதடைந்துள்ள சாலையை சீர் செய்ய உத்தரவிட்டார்.

  உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சீனிவாசன் தலைமையில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழுதான கொண்டை ஊசி வளைவு சாலையை சீர் செய்து வருகின்றனர்.

  7 மீட்டர் நீளம் வரை சாலையை அமைத்து வருவதால் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் போக்குவரத்துக்கு காலை முதல் பிற்பகல் வரை ஏலகிரி மலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் சாலை பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செய்யமுடியவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் நேற்று பிற்பகல் பணிகள் முடிவடைந்து இருக்கலாம் என நினைத்து சென்றனர். ஆனால் பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் நடுவழியில் நின்றனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நேற்று மாலை 4.30 மணியளவில் சாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு சென்றனர்.

  Next Story
  ×