search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

    • பட்டதாரி ஆசிரியர்கள் கழக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொது குழு கூட்டம் திருப்பத்தூர் அரசு பூங்கா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம்.தேசிங்குராஜன் தலைமை வகித்தார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர்.மதூரா, மாவட்ட சட்ட செயலாளர் என்..சசிகுமார், முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்டச் செயலாளர் வி.மூர்த்தி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அ. மாயவன், மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார், கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் எம்.சுரேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

    பேரறிஞர் அண்ணா வழங்கிய ஆசிரியர்களுக்கான மேற் படிப்புக்களுக்கான ஊக்க உயர்வை அப்படியே வழங்கிட வேண்டும்.

    நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரில், நமது வாழ்வதாரா கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு இல்லை என்றால் மாநில கழகம் எடுத்த முடிவின்படி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது நமது திருப்பத்தூர் மாவட்டத்திலும் மிகவும் எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளிகளில் மேல்நிலை டெட் தேர்வு தேர்ச்சி பெறாமல் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவரும் எவ்வித ஆசிரியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி டெட் தேர்வில் இருந்து அவர்களுக்கு. விலக்கு அளிக்க வேண்டும், ஆசிரியர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணி வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் மாநிலத் தலைவர் மாயவன் கூறியதாவது;

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகிற மார்ச் மாதம் 5 ம்தேதி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மாவட்ட தலை நகரங்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    மேலும் 6 மாத கால நிலுவை உள்ள அகவிலைப்படி ஓய்வூதிய திட்டம் உடனடியாக வழங்க கோரியும் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். என கூறினார் உடன் மாநில பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் உடன் இருந்தனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் துக்கன் நன்றி கூறினார்

    Next Story
    ×