என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
- அனைத்து துறையினரும் கலந்து கொள்ள கலெக்டர் உத்தரவு
- ஏராளமானோர் வந்ததால் டாக்டர்கள் திணறல்
திருப்பத்தூர்:
கலெக்டர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில் அனைத்து துறையினரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று 200 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வந்து இருந்தனர். ஆனால் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வச திகள் ஏதும் செய்யப்பட வில்லை. மேலும் வயதானவர் கள் நீண்டவரிசையில் காத்து இருந்தனர். முகாம் நடைபெறும் கூட்ட ரங்கில் கூட்ட நெரிசல் அதிக மானதால், மாற்றுத்திறனாளி களை பரிசோதனை செய்ய வந்த டாக்டர்களும் திணறினர்.
அப்போது அங்குதிடீரென வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்ததும் பல மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க நீண்ட நேரமாக வரி. சையில் கையில் மனுவுடன், உதவிக்கு வந்தவர்களின் உதவியுடன் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்த அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு வரிசையில் நீண்ட நேரம் காத்தி ருந்த மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்டனர். பிறகு, ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களது மனுக்கள் பதிவு செய்யப்பட் டது. அதன்பிறகு, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் டார். மேற்கொள்ளப்பட்டு, அவர்க ளுக்கான சான்றிதழ்கள் வழங் கப்பட்டது.