search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் மரக்கன்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
    X

    பொம்மிக்குப்பம் கிராமத்தில் சாலையில் மரக்கன்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சாலையில் மரக்கன்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

    • குண்டும் குழியுமாக இருந்தால் ஆத்திரம்
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் சாலைகள் போடப்படாததால் குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மோசமான சாலை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேரும் சகதியுமாக உள்ளன.அதனால் பொதுமக்கள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

    இது குறித்து அங்குள்ள கிராம மக்கள் பலமுறை மனுக்கள் மற்றும் புகார் அளித்தும் சாலைப்போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பொது மக்கள் தெருக்களில் மழைநீர் நிரம்பிய பள்ளங்களில் மரக்கன்றுகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொம்மிகுப்பம் உட்பட மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன . மழைக்காலத்தில் எங்கள் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பொம்மிக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கிராமத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திருப்பத்தூர் செல்கின்றனர்.

    இங்கிருந்து ஒரு சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலைகள் சரியாக இல்லாத பஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனை உள்ள திருப்பத்தூருக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    சிறிது நேரம் மழை பெய்தாலும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.

    எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ள ப்படவில்லை, தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறோம்.இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×