என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
  X

  வருமுன் காப்போம் மருத்துவ முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

  வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் கேத்தாண்டபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாட்சி தலைமை தாங்கினார். சின்னமோட்டூர் மருத்துவ அலுவலர் புகழேந்தி வரவேற்றார்.

  இதில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான க.உமாகன்ரங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சுரேஷ், திருப்பதி, மங்கம்மாள் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி குமார், துணை தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கோபி, உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் மற்றும் பரிசோதனைகளும் அதற்கான சிகிச்சைகளும் மருந்து மாத்திரைகளும் வழங்கினர்.

  Next Story
  ×