என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு
- அதிகாரி திடீர் ஆய்வு
- சுற்றுச் சூழலை மாசுப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை
வாணியம்பாடி:
வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தனியார் தொழிற்சாலை ஒன்று கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் பாலாற்றில் வெளியேற்றி வருவது தெரியவந்தது.
அதன் காரணமாக அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டருக்கு அவர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பினை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீர் அல்லது திடக்கழிவுகளை நிலத் திலோ, நீர் நிலைகளிலோ வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்தரவு அளிக்கப்பட்டு, சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்கான அபராதத்தொகை விதிக்கப்படும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் எச்சரித்துள்ளார்.






