என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழைக்காலங்களில் மின்சாதனங்கள் உபயோகிப்பது குறித்து துண்டு பிரசுரம்
- திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் விநியோகம்
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டம் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை கையாள்வது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறி யாளர்கள் பிரபு, கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணியை தொடங்கி வைத்து பேசினர்.
விழிப்புணர்வு பேரணி வாணியம்பாடி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சப் கலெக்டர் அலுவலகம் வழியாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் அருகில் முடிவடைந்தது.
பேரணியில் உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, சந்தானம், உதவி பொறியாளர்கள், முகமது முஸ்தபா, சுதாகர், பி.சோமு, மனோஜ், உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.