என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

    • உரிய நேரத்தில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் கு. செல்வராசு நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புங்கனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாடனூர், கொட்டையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் அங்கன்வாடி பணிகளையும், கொட்டையூர், தாயலூர், புங்கனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பசுமை வீடு திட்ட பணிகளையும் திட்ட இயக்குனர் ஆய்வு செய்து பணிகள் உரிய நேரத்திலும் தரமாகவும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லட்சுமி செந்தில் குமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×