search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் பணம், பொருட்கள் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த கோவில்.

    கோவிலில் பணம், பொருட்கள் கொள்ளை

    • உண்டியலை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மலையில் மயிலாடும்பாறை முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பூஜைகள் நடக்கிறது. விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி கிருத்திகை அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தினர்.

    நேற்று இரவு பூஜை முடிந்து பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.பூட்டை உடைத்து அங்கிருந்த சாமி அலங்கார பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.

    ஆடி கிருத்திகை முடிந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக இன்று காலை கோவில் நிர்வாகிகள் சென்றனர். அப்போது கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மயிலாடும்பாறை முருகன் கோவிலில் பணம் பொருட்கள் கொள்ளை போனது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×