என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    காற்றாலை ஏற்றி சென்ற கனரக லாரி நடுரோட்டில் பழுது
    X

    காற்றாலை ஏற்றி சென்ற கனரக லாரி நடுரோட்டில் பழுது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை - பெங்களூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • சர்வீஸ் சாலை வழியாக வாகனங்களை மாற்றி விட்டனர்

    வாணியம்பாடி:

    சென்னையில் இருந்து காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இறக்கையை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று இன்று காலை வாணியம்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    வாணியம்பாடி வளையாம்பட்டு சென்னை - பெங்களூர் 6 வழிச்சாலையில் மேம்பாலத்தில் கனரக லாரி வந்து கொண்டு இருந்தபோது திடீரென வாகனத்தில் என்ஜின் பழுதானது. இதனால் லாரி சாலையை மறித்தபடி மேம்பாலத்தில் நின்றதால் மற்ற எந்த வாகனமும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் சிக்கி திணறினர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேம்பாலம் வழியாக சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக மாற்றி விட்டனர்.

    சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் லாரி டிரைவர் என்ஜீனில் ஏற்பட்ட பழுதை சரி செய்தார்.

    இதையடுத்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 6 வழிச் சாலையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×