என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் மருத்துவ முகாம்
- கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
- 533 கால்நடைகளுக்கு சிகிச்சை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்பு, கோழி வளர்ப்பு, போன்ற கால்நடைகளை வளர்த்தல் பராமரிப்பு செய்து வருகின்றனர்.
இதனால் ஏலகிரி மலையில் கால்நடைகள் பெருகி வருகின்றன ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமத்திற்கும் ஒரே ஒரு கால்நடை மருத்துவம் மட்டுமே உள்ளது. இது பழத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் நேற்று ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் ராயனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், வேலூர் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் நவநீதகிருஷ்ணன், திருப்பத்தூர் உதவி இயக்குனர் மருத்துவர் முரளி முன்னிலையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஏலகிரி மலை உதவி மருத்துவர்கள் கி. விஸ்வநாதன் மற்றும் அருணாச்சலரமணன், கால்நடை ஆய்வாளர் கி. பாஸ்கர் ஆகிய மருத்துவர்களால் 533 கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 90 மாடுகள், 140 வெள்ளாடுகள், 96 செம்மறி ஆடுகள், 200 கோழி, 7 நாய்களுக்கு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.






