என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் உடல் தோண்டி எடுப்பு
- மீண்டும் அதே இடத்தில் அடக்கம்
- மனைவி இறப்பு சான்றிதழ் கேட்டதால் நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி (44) முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
ரஜினி இதனையடுத்து, அவரது உறவினர்கள் (கோப்புப்படம்). ரஜினியின் உடலை புள்ளாநேரி அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த ரஜினியின் மாதாந்திர ஓய்வூதியம் பணம் தனக்கு சேர வேண்டும் என அவரது மனைவி ஜெயஸ்ரீ, ராணுவ அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
ஆனால், ராணுவ அலுவலகத்தில் ரஜினி உயிரிழந்ததற்கான பிரேதப் பரிசோதனை சான்றிதழ் அளிக்கப்பட்டால் தான் அதற்கான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட தனது கணவர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்க வேண்டும் என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயஸ்ரீ கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மனு அளித்தார்.
அதனடிப்படையில், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி முன்னிலையில் மருத்துவக் குழுவினர் புள்ளாநேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ரஜினியின் உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து, மீண்டும் அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.






