என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

    • தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்
    • கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டி நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றது.

    இதில் தனிப்படை போலீசார் ரெயில்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையின் அருகே டிராவல் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை போலீசார் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    பறிமுதல் செய்த கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை கடத்திய கும்பல் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×