என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
    X

    துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்ததை முற்றுகையிட்ட காட்சி.

    துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

    • காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில சங்கம் ஒட்சா கூட்டமைப்பு சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் எம். கண்ணன், மாநிலத் தலைவர் எம் லட்சுமணன் ஆசிரியர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் துப்புரவு, பணியாளர்கள்., கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காக்க வேண்டி, இரவு பகல் என்று பாராமல் தங்கள் உயிர்களை பணயம் வைத்து துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர்.

    10 ஆண்டு பணி முடித்த பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், திடகழிவு மேளாண்மை திட்டத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து முழுநேரம் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.3,600 வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பணியில் முழுவதும் பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள் இந்த பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் பணியாளர்கள் இறந்தால் குழுக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

    மேலும் இந்த தூய்மை காவலர்களை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 40 ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கிரிஷா, வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் பிரதாப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×