என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சினிமா தியேட்டரில் ரசிகர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
    X

    விஜய் ரசிகர்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட காட்சி.

    சினிமா தியேட்டரில் ரசிகர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    • வாணியம்பாடியில் லியோ திரைப்படம் வெளியானது
    • போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள சிவாஜி சினிமாஸ் 3 தியேட்டர்களில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது.

    இந்த சிவாஜி தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக நடனமாடினர். மேலும் ஒரே வளாகத்தில் 3 தியேட்டர்கள் உள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்.

    அப்போது விஜய் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர். மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    அப்போது ஒரு ரசிகர் பல் துவக்கும் பிரஷ் கையில் எடுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    திரைப்படம் வெளியா னதும் விஜய் என்ட்றி கொடுக்கும் காட்சிகள் வந்த போது விஜய் ரசிகர்கள் செல்போன் வெளிச்சம் காட்டி உற்சாகமாக நடனமாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

    மேலும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் அதிக அளவில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×