என் மலர்
உள்ளூர் செய்திகள்

அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.
அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
- எம்.எல்.ஏ. செந்தில்குமார் பங்கேற்பு
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமார் கலந்துக் கொண்டு அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நகர அதிமுக செயலாளர் சதாசிவம், உதேயந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், நகர பொருளாளர் தன்ராஜ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தென்னரசு, நியூடவுன் பி. சங்கர், வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், கோவிந்தாசாமி, ராமசாமி, சிவானந்தம், செல்வராஜ் மற்றும் நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






