என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் கத்தி காட்டி மிரட்டிய வாலிபர் கைது
- மது போதையில் அட்டூழியம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக மது போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வாலிபர் ஒருவர் மிரட்டி சுற்றித் திரிந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திரியாலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஆதித்யன் (வயது 21) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆதித்யனை கைது செய்தனர்.
Next Story






