என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் ரூ.3 கோடியில் சாகச சுற்றுலா தலம்
    X

    ஏலகிரி மலையில் படகு இல்லம் மற்றும் செயற்கை நீரூற்று இடங்களை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏலகிரி மலையில் ரூ.3 கோடியில் சாகச சுற்றுலா தலம்

    • அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
    • படகு இல்லம், செயற்கை நீரூற்று இடங்களை ஆய்வு செய்தார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தலங்கள் அமைக்க சுற்றுலா துறை அமைச்சர் அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவிற்கு திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

    ஏலகிரி மலையில் சுற்றுலாத் துறையின் மூலமாக சுற்றுச்சூழல் தளம் கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் தளம் வர இருக்கிறது. தற்போதைய மக்கள் அதிக அளவில் மலைகளைப் பார்த்தபடி இயற்கையோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

    அதன் அடிப்படையில் சுற்றுலா துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 10 முதல் 15 டென்ட் ஆறு ஏக்கர் பரப்பளவில் சுற்று சூழல் தளம் மற்றும் வெவ்வேறு சாகச சுற்றுலாக்கள அந்த சுற்றுச்சூழல் தளத்தில் வர இருக்கிறது.

    இதற்காக சுற்றுலா துறை மூலம் செப்டம்பர் மாதத்தில் விதிமுறைகள் மற்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று ஏலகிரி மலையில் அத்தனாவூர் கிராமத்தில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

    ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளம் மற்றும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் ஆய்வு மேற்கொண்டு மற்றும் சாத்திய கூறுகள் அறிந்து இந்த இடத்தை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏலகிரி மலைக்கு வருகின்ற நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கு துறை அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்து, நெடுஞ்சாலைகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு முழுவதுமாக 1500-க்கு மேல் சுற்றுலா தளங்கள் இருக்கிறது அதில் 300 இடங்களை தேர்வு செய்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருடத்திற்கு 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் நிதியின் மூலம் புதுவகையான சுற்றுலா மேம்பாட்டினை கொண்டுவர இருக்கிறோம்.

    வருங்காலங்களில் சுற்றுலா துறையின் மூலம் பல சுற்றுலா தளங்கள் புதுப்பித்து பராமரிக்கப்படும். மேலும் புதுவிதமான சுற்றுலா அனுபவங்களை சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்க இருக்கிறோம்.

    இதுதவிர்த்து மற்ற மாவட்ட சுற்றுல்லாத்தலமான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கும், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பிறப்பன் வலசை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டார் அணை சென்னையில் உள்ள கொலவாய் ஏறி, பூண்டி போன்ற வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்பட உள்ளது.

    சுற்றுலா சாகச தலங்களை பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு முன்வந்து சுற்றுலாத்துறை மூலம் சாகச சுற்றுலா தலங்கள் கொண்டுவருவதற்கான விதிமுறைகளை சுலபமாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கதேந்திரகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உமா, இலட்சுமி ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் இராஜஸ்ரீ கிரிவேலன், உதவி செயற்பொறியாளர் இரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×