என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர், 2 இளம்பெண்களை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது
- கடன் தகராறில் பயங்கரம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஆகாஷ் (வயது 24), மேகநாதன் என்பவரின் மகன் அஜித் ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அருண்குமார் (24) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1500 கடனாக கொடுத்து ள்ளனர். அதில் ரூ.1000 அவர் கொடுத்துள்ளார். மீதி ரூ.500 கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆகாஷ் அருண்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை அன்று மாலை திருப்பி தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.
அன்று மாலை ஆகாஷ் தனது செல்போனில் அருண்குமாரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது நான் வெளியே இருப்பதாக கூறி அருண்குமார் போனை துண்டித்துள்ளார். அருண்குமார் எங்கே இருக்கிறார் என ஆகாஷ் விசாரித்ததில் அவர் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து கொண்டு அருண்குமார் வீட்டிற்கு வந்தார். அங்கு பணத்தை கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர் வாய் தகராறு முற்றியது.
அப்போது அவர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அருண்குமாரை தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை தடுக்க வந்த அருண்குமார் மனைவி காவியா (வயது 21) மற்றும் தங்கை ஐஸ்வர்யா (வயது 16) ஆகியோருக்கு கத்தி வெட்டு விழுந்தது.
படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காவியா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அஜித், ஆகாஷ் சிலர் மீது வழக்கு பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






