search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் 2 மணி நேரத்தில் 102 மில்லி மீட்டர் மழை
    X

    திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியில் கால்வாய் கழிவுநீர், மழை நீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    திருப்பத்தூரில் 2 மணி நேரத்தில் 102 மில்லி மீட்டர் மழை

    • வீடுகளில் கழிவுநீருடன் மழை நீர் புகுந்தது
    • மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 102.60 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூ, ர் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழை பெய்தது.

    திருப்பத்தூர் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது திருப்பத்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிரம்பி தெருக்களில் ஓடியது. திருப்பத்தூர் பெரியார் நகர், கலைஞர் நகர் டி எம் சி காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம் போல் கழிவுநீர் தேங்கியது. பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் கழிவுநீர் புகுந்து துர்நாற்றமும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    பெரியார் நகரில் உள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் போல் காட்சி அளிக்கின்றன.

    மழைக்காலங்களில் பெரியார் நகர் பகுதியில் குடும்பத்துடன் வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது நகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாய் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று காரணமாக மாங்காய் தோப்புகள் மாங்காய்கள் உதிர்ந்தன. இதேபோன்று கரும்பு நிலங்களில் சாய்ந்தது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைகோடியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சந்தைக்கோடியூர் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜோலார்பேட்டை பகுதி இருளில் மூழ்கியது.

    மேலும் தாமலேரிமுத்தூர் மற்றும் மூக்கனூர் பகுதியில் கோவில் திருவிழாவில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது பலத்த மழை பெய்தது காரணமாக மேற்கண்ட இரண்டு இடங்களில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் நடன நாட்டியலயா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏலகிரி மலையில் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆம்பூர் 5, ஆம்பூர் சர்க்கரை ஆலை 6, ஆலங்காயம் 20, வாணியம்பாடி 28, நாட்றம்பள்ளி 25, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பகுதி 23, திருப்பத்தூர் 102.6, திருப்பத்தூர் மாவட்டத்தில் சராசரியாக 209 அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×