search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ. 3.10 கோடி வருவாய்
    X

    உண்டியல் எண்ணும் பணியை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் கோவில் இணை ஆணையர் கார்த்திக்,உதவி ஆணையர் சங்கர், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ. 3.10 கோடி வருவாய்

    • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்தி 40 ஆயிரத்து 748 இருந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாதாந்திர உண்டியில் எண்ணிக்கை நேற்று காவடி பிறை மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டது. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவா ரப்பணி குழுவினர் உண்டி யல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்தி 40 ஆயிரத்து 748-ம், உலோகங்கள் தங்கம் 2 கிலோ 800 கிராம், வெள்ளி 25 கிலோ, பித்தளை 33 கிலோ, செம்பு 6 கிலோ, தகரம் 2 கிலோ மற்றும் அயல் நோட்டு 292-ம் இருந்தது.

    உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநி லையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொது மக்கள் பிரதிநிதியாக வேலாண்டி ஓதுவார், கருப்பன், மோகன், அயல் பணி மற்றும் கோவில் பணி யாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×