search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
    • திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பிராத்தனை நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

    கொடியேற்று விழாவை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்பணி. பன்னீர்செல்வம் தலைமையில் அமலிநகர் பங்குத்தந்தை அருள்பணி. வில்லியம் சந்தானம், பங்குத்தந்தை அன்றனி புருனோ, திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை ஆனந்த், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் கொடி மந்திரிக்கப்பட்டு. கொடி பவனியாக வந்து பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.

    திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பிராத்தனை தொடர்ந்து நவநாள் திருப்பலி சிறப்பிக்கப்படும்.

    11-ம் தேதி மாலை சிறப்பு ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு இயக்குனர் ஜாண் பென்சன், நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வான ஆண்டுப் பெருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி வருகின்ற 12-ம் தேதி காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி பேரருள்பணி செல்வராஜ் மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு, அருள்பணி. ஜோசப் இசிதோர் ஆயர் இல்லம். ஆகியோர் கலந்துகொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    விழா ஏற்பாடுகள் பங்குத்தந்தை அருள்பணி. அன்றனி புருனோ தலைமையில் பங்குப் பணிக்குழுவினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×