என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைத்தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது
    X

    யானைத்தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

    • யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
    • 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பாலசமுத்திரம் கிழக்கு பீட் பகுதியில் கடந்த 16ம் தேதி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போது பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த ராமர் (வயது 53) என்பவர் அங்கு தேன் சேகரிக்க சென்றார்.

    அப்போது யானை இறந்து கிடந்ததை பார்த்த ராமர் அதிலிருந்த 2 தந்தங்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் தந்தங்களை விற்றால் அதிக விலை கிடைக்கும் என நினைத்து இதுகுறித்து கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரம் (49) என்பவரை அணுகினார். பின்னர் பழனி அடுத்துள்ள வயலூரை சேர்ந்த கணேசன் (55) என்பவருடன் சேர்ந்து தந்தத்தை விற்க புரோக்கர்களை தேடினர். அப்போது தந்தம் வாங்க வருவதுபோல வனத்துறையினர் மாறுவேடத்தில் வந்து அவர்கள் 3 பேரையும் பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து 40 செ.மீ. உயரமுள்ள 2 கிலோ எடைகொண்ட 2 யானை தந்தங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே மதுரை மண்டல வன உயிரின கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் யானை இறந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனப்பாதுகாவலர் காஞ்சனா தெரிவிக்கையில்,

    பழனி வனப்பகுதியில் யானை இறந்த விவகாரத்தில் அதுகுறித்த எந்தவித அறிகுறியே இல்லாமல் தந்தங்கள் கடத்தப்படும் வரை மெத்தனமாக இருந்த பழனி வனச்சரக அலுவலர் கோகுலகண்ணன், பாரஸ்டர் பழனிச்சாமி, ஜெயசீலன், கார்டு சரண்யா, களப்பணியாளர் ஆல்வின் ஆகிய 5 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உரிய ஆதாரம் இல்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×