search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டு மக்களுக்காக முதல் - அமைச்சர் 24 மணி நேரமும் உடலை வருத்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்
    X

    தமிழ்நாட்டு மக்களுக்காக முதல் - அமைச்சர் 24 மணி நேரமும் உடலை வருத்தி உழைத்துக்கொண்டிருக்கிறார்

    • அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

    திருவண்ணாமலை:

    தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூர் மற்றும் அத்தியந்தால் ஆகிய கிராம ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மனுக்களை பெற்றார்.

    அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவை அறிந்து திட்டங்களை தீட்டி அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

    குறிப்பாக இந்த ஆட்சியில் பெண்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உத்தமர் தலைமையிலான நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து துறை அலுவலர்களுடன் இங்கு வந்துள்ளேன்.

    நீங்கள் அளிக்கும் மனுக்கள் உங்களுக்கு ஆணைகளாக கிடைக்கும். தமிழ்நாடு இன்று சுபிட்சமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சப் - கலெக்டர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மெய்யூர் சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×