என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • போளூர் பஜார் வீதி சிந்தாரப்பேட்டை அண்ணா சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர்
    • மாணவ, மாணவிகள் 80 பேர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போளூர் தாசில்தார் சஜேஷ் பாபு, சமூகநலத்துறை தாசில்தார் செந்தில்குமார் துணைத் தாசில்தார் தெய்வநாயகி, தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கலையரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், மலைமாறன், மீனா மயிலரசன், காவல்துறை உதவி ஆய்வாளர் அய்யப்பன், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏழுமலை ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.பேரணி போளூர் பஜார் வீதி சிந்தாரப்பேட்டை அண்ணா சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தன.

    பேரணியில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 80 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×