search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்  கோவில் ஆவணி தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • ஆவணி பெருந்திருவிழா கடந்த 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று காலை தேரில் பெருமாளும், தாயாரும் எழுந்தருளினார்கள்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியை அடுத்துள்ள திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில் நவதிருப்பதி தலங்களில் 8- வது தலமாகும்.

    செவ்வாய் தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவர் இழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள் பாலித்த ஸ்தலம். ஸ்ரீமதுரகவி ஆழ்வார் அவதரித்த தலமாகும்.

    ஆவணி திருவிழா

    இந்த கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினசரி காலை வைத்த மாநிதி பெருமாள் மாடவீதி எமுந்தருளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

    கருடசேவை

    28-ந் தேதி 5-ம் நாள் கருடசேவையை முன்னிட்டு வைத்தமாநிதி கருடவாகனத்திலும் ஸ்ரீமதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் ஆன்மீக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேரோட்டம்

    திருவிழாவின் 10-ம் நாளான இன்று காலை தேரில் பெரு மாளும், தாயாரும் எழுந்தருளினார்கள் தேரை பக்தர்கள் பொதுமக்கள் முக்கிய வீதி வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    தேரோட்டத்தில் ஏரல் தாசில்தார் கண்ணன், ஊர் தலைவர் பச்சிராஜன், ராமகிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், சுடலைமுத்து, ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 7மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) பெருமாள், தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, இளநிலை பணியாளர் பெருமாள், திருக்கோவில் ஸ்தலத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×