search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை புஷ்பலதா பள்ளியில் சிந்தனை திறன் போட்டி
    X

    கண்காட்சியை எழுத்தாளரும், சாணக்கிய பொது தலைமைக் கழகத்தின் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பிள்ளை, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சிவநந்தன் ஆகியோர் பார்வையிட்ட காட்சி

    பாளை புஷ்பலதா பள்ளியில் சிந்தனை திறன் போட்டி

    • பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பன்முக சிந்தனையினை மாணவர்களிடையே உருவாக்கும் பொருட்டு சிந்தனை திறன் போட்டி நடைபெற்றது.
    • பள்ளி மாணவர் களுக்கிடையே விளம்பரப் படுத்துதல், வினாடி வினா, நிறுவன வரைபடம் வரைதல், படக்கதை, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பன்முக சிந்தனையினை மாணவர்களிடையே உருவாக்கும் பொருட்டு சிந்தனை திறன் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களை சேர்ந்தப் பள்ளிகள் கலந்து கொண்டன. 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தலைமை விருந்தி னர்களாக எழுத்தாளர், சாணக்கிய பொது தலைமைக் கழகத்தின் இயக்குநர், ராதாகிருஷ்ணன் பிள்ளை, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.சிவநந்தன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவர் களுக்கிடையே விளம்பரப் படுத்துதல், வினாடி வினா, நிறுவன வரைபடம் வரைதல், படக்கதை, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    புஷ்பலதா பள்ளியின் பொருளியல், வணிகவியல் மற்றும் ஊடகப்பிரிவு மாணவர்கள் தங்களது பாடப்பிரிவு சார்ந்த விளக்கங்களையும், தலைப்புகளையும் விளக்கும் பொருட்டு விளக்கப் படங்களையும், மாதிரி வடிவங்களையும் கண்காட்சிகளாகக் காட்சிப்படுத்தினர்.

    இப்போட்டியில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த கேடயத்தினைப் பெற்று முதல் இடத்தையும், சக்தி விநாயகர் பள்ளி 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    பரிசுகளை தலைமை விருந்தினர்கள் வழங்கி மாணவர்களைப் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    Next Story
    ×