search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே  பாஞ்சான்குளம் அரசு பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை- மாவட்ட கல்வி அதிகாரி பேட்டி
    X

    சங்கரன்கோவில் அருகே பாஞ்சான்குளம் அரசு பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை- மாவட்ட கல்வி அதிகாரி பேட்டி

    • பெட்டிக்கடையில் சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்து சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது.
    • இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி கடை உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்து சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலானது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி கடை உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அரசு பள்ளி

    இந்நிலையில் அங்குள்ள ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கு மாறு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக நடத்தப் படுவதாக தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

    கல்வி அதிகாரி ஆய்வு

    இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி கபீர் இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறிய தாவது;-

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அங்கு விசாரணை நடத்தி னோம். அதில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

    அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவது தெரிய வந்தள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும் அறிக்கை அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×