search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை நந்தனார்தெருவில் 6 மாத காலமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை- குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
    X

    பாளை நந்தனார்தெருவில் 6 மாத காலமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை- குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் புகார்

    • நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கமிஷனர் (நிர்வாகம்) வெங்கட்ராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • பாளை வேன் நிறுத்தம் அருகே உள்ள ஆலமரத்தில் வேர்கள் குடிநீர் குழாயை அடைத்து விடுவதால் தண்ணீர் விநியோகம் அடிக்கடி தடை படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உதவி கமிஷனர் (நிர்வாகம்) ெவங்கட்ராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    அப்போது 32-வது வார்டுக்கு உட்பட்ட பாளை நந்தனார்தெரு பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாளை வேன் நிறுத்தம் அருகே உள்ள ஆலமரத்தில் வேர்கள் குடிநீர் குழாயை அடைத்து விடுவதால் தண்ணீர் விநியோகம் அடிக்கடி தடை படுகிறது. எனவே தனி பைப்லைன் அமைத்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சுப்பிரமணி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    23-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் சன்னதி தெருவில் ஏராளமான ஆலயங்கள், பள்ளிகள் உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை ஆலயங்கள், பள்ளி அருகே கொட்டுகின்றனர். எனவே அப்பகுதி பொதுமக்களுக்கு சட்டரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். அதை மீறுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ஓய்வுபெற்ற ராணுவவீரர்கள் சார்பில் ெகாடுக்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஓய்வுபெற்ற ராணுவவீரர்களுக்கு வீட்டு தீர்வை, குடிநீர் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெல்லை மாநகராட்சியிலும் அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    தியாகராஜநகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில், டி.வி.எஸ்.நகர், தாமிரபதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், விளம்பர போஸ்டர்கள் ஒட்டி விடுகின்றனர்.

    இதனால் அதில் எழுதப்பட்டிருக்கும் மின்வாரிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    Next Story
    ×