என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்த வாலிபர் கைது
- நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி அருகில் கடந்த 9-ந் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைத்து, பாவாயியை கொலை செய்து விட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர்.
- அவரிடம் இருந்து பணம் ரூ.1200, கேஸ் சிலிண்டர், டூல்ஸ் பாக்ஸ், திருட பயன்படுத்திய டூ வீலர், மற்றும் பிரோவை உடைக்கப் பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி அருகில் உள்ள ராஜாபாளையம் வணங்காமுடி தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, விவசாயி. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பாவாயி (65), வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 9-ந் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைத்து, பாவாயியை கொலை செய்து விட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர். இது சம்மந்தமாக தகவல் கிடைத்ததும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்திரவின்பேரில், இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ஆயில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ரகசிய விசாரணை செய்தும், அறிவியல் பூர்வமான தடயங்களை வைத்தும் புலன்விசாரணை செய்தனர்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில், இந்த வழக்கு சம்மந்தமாக, கார்கூடல்பட்டியைச் சேர்ந்த அரப்புளி என்பவரின் மகன் செந்தில் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், அவரிடம் இருந்து பணம் ரூ.1200, கேஸ் சிலிண்டர், டூல்ஸ் பாக்ஸ், திருட பயன்படுத்திய டூ வீலர், மற்றும் பிரோவை உடைக்கப் பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். செந்தில் ஏற்கனவே ஆயில்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்டாலா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி திருட்டு வழக்கில் குற்றவாளி ஆவார். போலீசார் செந்திலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






