என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசனூர் அருகே குதிரையை கடித்து கொன்ற சிறுத்தையால் கிராம மக்கள் பீதி
    X

    ஆசனூர் அருகே குதிரையை கடித்து கொன்ற சிறுத்தையால் கிராம மக்கள் பீதி

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஆசனூர் அருகே கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டை ஆடி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசனூர் சோதனை சாவடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் சென்ற குதிரையை துரத்த தொடங்கியது. சிறுத்தையை பார்த்து பயந்து குதிரை ஓட தொடங்கியது. ஆனால் சிறுத்தை விடாமல் சென்று துரத்தி அந்த குதிரையை தாக்கி கழுத்தில் கடித்து கொன்றது. பின்னர் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் குறிப்பாக குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் இனியும் தாமதிக்காமல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×