search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயண சீட்டு வழங்கும் மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்
    X

    பயண சீட்டு வழங்கும் மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்

    • காரைக்கால் - திருச்சி ரெயில் பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
    • திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தாா்.

    செயலா் வக்கீல் ஜீவக்குமாா் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூா் ரெயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூா் ரெயில் நிலைய பின்பகுதி நுழைவு வாயில் அருகேயுள்ள பயணச் சீட்டு வழங்கும் மையத்தை 24 மணிநேரமும் செயல்பட வைத்து, அங்கு முன்பதிவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

    வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் மாலை 5.15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து புறப்படுகிறது.

    அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், பணி முடிந்து மாலையில் வீடு திரும்ப வசதியாகவும், மாணவ, மாணவிகள் செல்ல வசதியாகவும் மாலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும்.

    பயணிகளுக்கு பயன்படும் வகையில் வண்டி எண் 06646 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரெயில் காலை 8 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்படும் விதமாக பயண நேரத்தை மாற்ற வேண்டும்.

    திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.05 மணிக்கு பிறகு 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில்தான் உள்ளது.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினா்கள் கண்ணன், திருமேனி, செல்லகணேஷ், உமா்முக்தாா், பைசல்அமகது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×